தென் மாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைக்கப்படுகின்ற சங்கங்களைப் பதிவு செய்தல் தொடர்பான அலுவல்கள், மேற்பார்வை அலுவல்கள் மற்றும் அச்சங்கங்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கல்.
கூட்டுறவுச் சங்கங்களின் ஆளணியினை மதிப்பீட்டினை அனுமதித்தல் மற்றும் திருத்தங்களைச் செய்தல்.
கூட்டுறவுச் சங்கங்களின் பணிப்பாளர் சபையினை நியமித்தல்,நீக்கல்களை மேற்கொள்ளல்.
கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களுக்கு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனுமதியினை வழங்க முடியாத மூலதனப் பெறுமதியினைக் கொண்ட சொத்துக்களைக் கொள்வனவு செய்தல்,அகற்றுவதற்கு மற்றும் நிர்மாணிப்பதற்கு அனுமதியினை வழங்கல்.
கூட்டுறவுச் சங்கங்களின் பணிப்பாளர் சபை மற்றும் பணிக்குழுச் சபையினர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான செலவினங்களை செய்வதற்கான அனுமதியினைப் பெற்றுக் கொடுத்தல்.
கூட்டுறவு நிதியின் மூலம் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கடன்களைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான அனுமதியினை வழங்கல்.
கூட்டுறவுச் சங்கங்களுக்கு புதிய நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் போது தேவையான அனுமதியினைப் பெற்றுக் கொடுத்தல்.
கூட்டுறவு ஊழிய ஆணைக்குழு,கூட்டுறவு அபிவிருத்தி ஏனைய திணைக்களங்கள் மற்றும் ஏனைய கூட்டுறவு வியாபாரத்துடன் தொடர்பான நிறுவனங்களுக்குத் தேவையான அறிக்கைகளை வழங்குதல் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இந்நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கமைப்புச் செய்தல்.
பொதுமக்கள் முறைப்பாடுகள் மற்றும் சங்கங்களின் ஊழல்,மோசடிகள் மற்றும் தூசனகதைகளுக்கு உரிய விசாரணைகளை உதவி ஆணையாளர் அலுவலகத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்ற பரிந்துரைகளுடன் அறிக்கை உரிய பிரிவுகளுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தல்.
கிளைகளின் செயற்பாடுகளுக்கு உரிய சுற்று நிரூபங்களை பிரசுரிப்பதற்குத் தேவையான சிபாரிசுகளை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருக்கு வழங்குதல்.
மாகாண ஒழுங்கமைத்தல் குழுவினை ஏற்பாடு செய்தல்.
மாகாண ஒழுங்கமைத்தல் குழுவினை ஏற்பாடு செய்தல்.
ஒழுங்கமைப்புச் செயற்பாடுகளுக்கு உரிய சுற்று நிரூபங்கள் மற்றும் கடிதங்களை மாவட்டங்களுக்குப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் அதன் பிரகாரம் செயற்படுத்தப்படுகின்றதா? என்பன பற்றி மேற்பார்வை செய்தல்.
தீர்க்கமான முடிவின் பின்னர் அதிருப்த்திக்கு உட்பட்ட தரப்பினர் மூலம் முன்வைக்கப்படுகின்ற ஒழுங்கான மேம்முறையீட்டினை விசாரணை செய்து தீர்ப்பினைப் பெற்றுக் கொடுத்தல்.
சட்டத்தின் 46 (i)பரீட்சாத்த மீளாய்வின் பின்னர் குற்றங்களை ஒழுங்குபடுத்தி சபைக்கு முன்வைத்தல்.
சட்டத்தின் 66 ஆவது பிரிவின் கீழ் உரிய குற்றச் சாட்டாளர்களிடம் காரண காரியங்களை விசாரணை நடாத்தி கட்டளைகளை வழங்கல் மற்றும் அப்பணம் அறவிட முடியாவிடின், 66(ii) ஆம் பிரிவின் கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்புதல்.
கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பதிவாளர் தரப்பினர் தொடர்பான வழக்கு ஒன்றிற்காக தேவையான அரச நீதி உதவியினைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் அதற்காக முன் ஏற்பாடாக பிரதான அலுவலகத்தின் சட்டப் பிரிவில் இருந்து பெற்றுக் கொண்டு அரச சட்டத்தரணிகளிடம் ஒப்படைத்தல்.
உரிய வழக்கு மேற்பார்வையினை ஒழுங்குபடுத்தி தென் மாகாண சட்ட உத்தியோகத்தர் மூலம் நீதிபதித் திணைக்களத்திற்கு ஒப்படைத்தல் மற்றும் உயர்நீதிமன்ற சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடல்.