கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்திற்குக் கிடைக்கப் பெறுகின்ற அன்றாட தபால்கள் தொடர்பான அனைத்து விதமான கடமை அலுவல்கள் மற்றும் திணைக்களத்தின மூலம் வெளித் தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற பதிவு / சாதாரணக் கடிதங்களைப் தபாலில் இடுதல் சம்பந்தமான அனைத்து கடமைகளும்..
சுதந்திர தபால் மற்றும் தபாலினை தொடர்ந்தேர்ச்சியாக நடாத்திச் செல்லல்.
எரிபொருள் ஒதுக்கீட்டு ஆணைகளை விநியோகித்தல்,எரிபொருள் கட்டணப் பற்றுச் சீட்டுக்களுக்கான கொடுப்பனவுகளைச் செய்தல் மற்றும் மேலதிக எரிபொருட்களை மீளளிப்புச் செய்தல்.
இயங்கும் குறிப்புக்களை உரிய தினங்களில் கயக்காய்வாளர் முன்னிலையில் சமர்ப்பித்தல்.
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் / பதிவாளர் தவிர கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்திற்குக் னைய அனைத்து பதவி நிலை மற்றும் பதவி நிலையற்ற உத்தியோகத்தர்களின் தனிப்பட கோவை தொடர்பான அனைத்து விதமான கடமை அலுவல்களை மேற்கொள்ளல்.(சம்பள உயர்வுகளைப் பெற்றுக் கொடுத்தல்,சேவையினை நிரந்தரமாக்குதல்,பதவி வழங்கல், மேம்முறையீடுகள் கம்பந்தமான அலுவல்களை மேற்கொள்ளல்.)
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் மூன்றிலும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து உத்தியோகத்தர்களினதும் விடுமுறை,பட்டதாரிப் பயிலுநர்களின் மற்றும் பல்வேறு விதத்திலும் அபிவிருத்தி உதவியாளர்களின் விடுமுறை தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல்.
நீர்,மின்சாரம்,தொலைபேசி,பாதுகாப்புச் சேவை, மற்றும் சுத்திகரித்தல் சேவை உட்பட ஏனைய பல்வேறு விதமான கொடுப்பனவு உறுதிச் சீட்டுக்களைப் பரீட்சித்தல் மற்றும் சிபாரிசு செய்தல்.
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் மூன்றிலும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து உத்தியோகத்தர்களினதும் கட்டாயப் பிரயாணக் கொடுப்பனவு , மொழிபெயர்ப்புப் பிரயாணக் கொடுப்பனவு ,விடுமுறை நாட்களுக்கான சம்பளத்தைப் பரீட்சித்தல்,சிபாரிசு செய்து அனுமதிக்காக மற்றும் உறுதிப்படுத்துவதற்காக அனுப்பி வைத்தல்.
பொல்கொல்ல தேசிய கூட்டுறவு நிறுவனம் மற்றும் வக்வெல்ல முகாமைத்துவப் பயிற்சி நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பான கடமை அலுவல்கள் மற்றும் நடைமுறைப் பயிற்சிக்கான தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூலம் இணைக்கப்படுகின்ற பயிலுநர் பட்டதாரிகளுக்கு பயிற்சியினை உரிய கடமை அலுவல்களை மேற்கொள்ளல்.
பணிக்குழு அறிக்கைகளைத் தயாரித்து பிரதான செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்தல்.
ஊழிய வெற்றிடங்கள் தொடர்பாக அறியப்படுத்தல் மற்றும் அனுமதிக்கப்பட்ட பணிக்குழுத் திருத்தங்கள் தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல்.
அதிகாரக் கையளிப்புக்கள் தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல்.
அலுவலகத்தின் வருடாந்த செயலாற்று அறிக்கையினைத் தயாரித்தல்.
உரிய ஆண்டுக்கான நிர்வாக அறிக்கைகளை ஒழுங்குபடுத்தல்.
ஒழுக்காற்று நடவடிக்கைகள் / பூர்வாக விசாரணைக் கோவையினை நடாத்திச் செல்லல்.
அனைத்து உத்தியோகத்தர்களினதும் மேலதிக நேரக் கொடுப்பனவிகளையும் மேற்கொள்ளல்
அனுசரணை பருவகால ஆணைச்சீட்டுக்கள் தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல்.
வர்த்தமானிப் பத்திரிகை தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல்
வாடகை ஒப்பந்தங்கள் தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல்.
தொலைபேசிப் பெயர்க் கொத்தினை புதுப்படுத்தி , நடாத்திச் செல்லல்.
கள உத்தியோகத்தர்களின் மோட்டார் சைக்கிள் தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல்.
அரச விளையாட்டு வைபவம் தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல்..
தேர்தலுக்குத் தேவையான தகவல்களை வழங்கல் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல்..
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்களின் செய்யவுள்ள திட்டங்கள், தினக் குறிப்புக்கள் மற்றும் செய்யவுள்ள திட்டத் திருத்தங்கள் சிபாரிசு மற்றும் அனுமதிக்காக அனுப்புதல்..
உத்தியோகத்தர்களின் உள்ளக மற்றும் வருடாந்த இடாற்றம் தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல்..
உத்தியோகத்தர்களின் அக்ரஹார காப்புறுதி தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல்.
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்து உபகரணங்கள் , கட்டடப் பராமரிப்பு மற்றும் புணரமைத்தல் அலுவல்கள் தொர்பான ஒருங்கமைப்புச் செய்து கொடுத்தல்.
சுவட்டு அறை ( ஆவண அறை) க்குப் பொறுப்பான தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல்.
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களினதும் கடமைகளைக் கையளித்தல் தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளல்.