ஓய்வூதியப் பிரிவு

ஓய்வூதியப் பிரிவு

அறிமுகம்

தென் மாகாணத்தின் கூட்டுறவு ஊழியர்களின் ஓய்வூதியப் சாசனம் மற்றும் கட்டளைகள் உட்பட சட்டக் கட்டமைப்புகள்,சாசனங்கள் மற்றும் தீர்மானங்களுக்கு இணங்குகின்ற வகையில் ஓய்வூதியத்தினை வழங்கும் செயற்பாட்டினை ஒழுங்குபடுத்தல் மற்றும் அதற்கு உரிய ஒழுங்கு விதிகளை விதித்தல்.

மாதாந்த ஓய்வூதிய சலுகைகளை தொடர்ந்தேர்ச்சியாக செலுத்துதல் மற்றும் துல்லியமாக செலுத்தப்படுதல்.

ஓய்வூதிய அங்கத்துவத் தொகையினைச் சேகரித்தல் மற்றும் ஏனைய வருமானங்களைச் சேகரித்தல் மற்றும் முகாமைத்தும் செய்தல்.

வருடாந்த நிதி வெளியீடுகளை ஒழுங்குபடுத்தல் ,வரவு செலவுகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் முன்னேற்றத்தினை ஓய்வூதிய ஆலோசணைக் குழுவிற்கு சமர்ப்பித்தல்.

ஓய்வூதியங்களை வழங்கும் போது மற்றும் செலுத்தும் போது அரச நிதிக் கொள்கைகள் மற்றும் நிதித் தரநிலைகளுக்கு இணங்கிய விதத்தில் செய்படல்.

ஓய்வூதிய நிதியினை நீண்ட நிலையான தன்மைக்காக மேலதிக நிதியினை பொருத்தமான முறையில் முதலீடு செய்தல்.

நோக்கங்கள்

ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்பினை ஏற்படுத்தல்.

வியாபாரத்தின் தொடர்ந்தேர்ச்சியான நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தல்.

கூட்டுறவு வியாபாரத்தின் திறமை மற்றும் அனுபவங்கள் மிக்க பணிக்குழு அங்கத்தவர்களை தக்கவைத்துக் கொள்ளல்.

சங்கங்களுக்கு இணைத்துக் கொள்ளல்,தரம் உயர்த்தல் உட்பட மனித வளங்ளின் அலுவல்களை ஒழுங்கு முறைப்படுத்தல் மற்றும் வினைதிறன் மிக்கதாக்கல்.

நோக்கங்கள்

வினைதிறன் மிக்க கூட்டுறவு வியாபாரம் ஒன்றினை தென் மாகாணத்திற்குள் நடைமுறைப்படுத்தல்.

கிராமியப் பொருளாதாரத்தினை உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தல்.